உலக போலியோ ஒழிப்பு தினம்” திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.
மேலும் “இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது” நினைவுகூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் 28 – 10 – 2024 அன்று திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.
இவ் நிகழ்வில் உலகளவில் ரோட்டரி கழகத் தின்செயல்பாடுகளை விபரித்து பெரிய சாதனையான “போலியோ இல்லாத உலகம்” திட்டத்தை விபரித்ததுடன் வரவேட்ப்புரையையும் திரு ஜெயசங்கர் மற்றும் திரு தவசிலிங்கம் நிகழ்த்தினார்கள்.
தருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள், பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்,, இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது” சம்பந்தமான விபரங்களை எடுத்து கூறி, உலகத்திலே போலியோ இல்லா தொழிப்பதட்கு சர்வதேச ரோட்டரி கழகம் 550 மில்லியன் டாலர் நிதி சேகரித்து வழங்கிய விபரங்களையும் எடுத்து கூறினார்.
இந்த வருடம் இன்றுவரை உலகில் 54 போலியோ நோயாளியாளிகள் மட்டுமே, பாக்கிஸ்தான்(32) மற்றும் ஆப்கானிஸ்தான்(22) ஆகிய நாடுகளி லிருந்து இனம் காணப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் இலங்கையில் இருந்து மலேரியா நோய் இல்லாதொழிக்கப்பட்டதையும். ஞாபகப்படுத்தி அவ்வாறு டெங்கு நோயையையும் ஒழிப்பதட்கு மாணவ சமுதாயமும் முன் வர வேண்டுமென்று கேட்டு கொண்டார் இறுதியில் திருகோணமலை பரி ஜோசப் கல்லூரி இன்டெரெக்ட் கழக சார்பில் நன்றி உரை தெரிவிக்கப் பட்டது.