பிபில – மஹியங்கனை பிரதான வீதியில் பதுல்லகெட்டிய பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மண் மேடு மற்றும் கொங்கிரீட் பாறை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்த நிலையில் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.