அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஹிடோகம மற்றும் மாபலடிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பதவியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை பதவியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 01 ஆம் மைல் பகுதியில் வாகன சோதனை நடாத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிப்பொருட்களில் 75 கிலோ கிராம் துப்பாக்கி, 90 ஜெலிக்னைட் குச்சிகள், 300 டெட்டனேட்டர்கள் மற்றும் 05 வெடிகுண்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பதவியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.