யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் வீடொன்றின் மீது தொடர்ச்சியாக வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்தி வரும் நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் அசண்டையீனமாக நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மல்லாகம் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த எட்டாம் திகதியும் இதே போன்ற வன்முறை சம்பவம் குறித்த வீட்டில் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டபோதும் பொலிஸார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டாம் தடவையாக குறித்த வீட்டிற்குள் நுழைந்த வன்முறை கும்பல் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.