இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும்.
அவுஸ்திரேலியா இந்த விமானத்தை இலங்கைக்கு வழங்கியமை, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வலியுறுத்துவதோடு, மனித கடத்தலை தடுப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.