யாழ்ப்பாணத்தின் ஊழல் விசாரணைகளானவை டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தொடங்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், டக்ளஸ் தேவானந்தா தொடர்பில்,
பல்வேறு மட்டங்களில் தனிநபர்களை கடத்தி கொலை செய்து கப்பம் வசூலித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் மூலம் நான்காயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக சம்பாதித்திருக்கின்றார்.
ஸ்ரீதர் திரையரங்கு உட்பட தனியார் சொத்துக்களை அபகரித்துடன் அரச சொத்துக்களை முறை தவறி பயன்படுத்தியதன் மூலம் அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்திருக்கின்றார்.
பிரதேச மற்றும் நகர சபைக்களுக்கு சொந்தமான அரச வாகனங்களை அபகரித்திருக்கின்றார்.
அரச பொது நிர்வாகத்தில் அத்துமீறி தலையீடு செய்து அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார்.
சிபாரிசுகள் மூலமான முறைகேடான அரச ஊழியர் நியமனங்கள் ஊடாக திறைசேரிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பனை அபிவிருத்தி சபை, திக்கம் வடிசாலை, வட கடல் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களை சீரழிந்து இருக்கின்றார்.
திருமதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் மட்டும் விடுவிக்கப்பட்ட 81 கோடி ரூபா பணத்தை ஒரே தடவையில் கையாடல் செய்து இருக்கின்றார்.
பாராளமன்ற உறுப்பினருக்குரிய வரி சலுகை மூலம் இறக்குமதி செய்த Toyata Land Cruiser வாகனத்தை GAPC பெரேரா என்பவருக்கு விற்று காசு சம்பாதித்திருக்கின்றார்.
இழுவை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களிடம் கப்பமாக ரூபா 5,000 வசூலித்திருக்கின்றார்.
யாழ்ப்பாண ஈ பி டி பி அலுவலகத்திற்கான லட்சக்கணக்கான மின்சார நிலுவையை செலுத்த தவறி ஏமாற்றியிருக்கின்றார்.
கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4 ளிலும் தனக்கு சொந்தமாகவிருந்த வீடுகளுக்கான 1 கோடிக்கும் அதிகமான தண்ணீர் கட்டணத்தை செலுத்த தவறியிருக்கின்றார்.
வீதி புனரமைப்பு உட்பட அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதன் மூலம் திறைசேரிக்கு கோடிக்கணக்கான இழப்பை ஏற்படுத்திருக்கின்றார்.
யாழ்ப்பாண மற்றும் கொழும்புக்கு இடையில் பசில் ராஜபக்சே சகிதம் நடத்தபட்ட சொகுசு பஸ் சேவையில் முறைகேடுகளில் ஈடுபட்டு அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.
கோவில்கள் புனரமைப்பு என்கிற பெயரில் முறைகேடான காசோலை மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றார்.
சட்டவிரோத விபச்சார வலையமைப்பொன்றுக்கு பெண்களை ஈடுபடுத்தி பணம் சம்பாதித்திருக்கின்றார்.
முறைகேடான கஸ்தூரியார் வீதி புது கட்டட ஒப்பந்தம், DD தொலைக்காட்சி நிறுவனத்தையும்,
மகேஸ்வரி நிதி அலுவலகத்தையும் சட்டவிரோதமாக நடத்தியமை, மாநகரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிக நியமனங்கள் என பல்வேறு தரப்பட்ட மோசடிகள் ஊடாக யாழ் மாநகர சபைக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.
கடலட்டை பண்ணைகளை முறைகேடாக வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.
பளை உட்பட பல பகுதிகளில் ஈபிடிபி உறுப்பினர்கள் முறைகேடாக அரச காணிகளை அபகரிக்க துணை போயிருக்கின்றார்.
டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவர் தம்பி தயானந்தா ஆகியோர் மதுபான அனுமதி பத்திரங்களை முறைகேடாக பெற்று இருக்கின்றார்கள்.
அரசின் பாதுகாப்பு அமைச்சிடம் மாதம் தோறும் பெற்ற துணைப்படை வேதனத்தை கூட ஈபிடிபி உறுப்பினர்களிடம் நேர்மையாக பகிரவில்லை.
என பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.