தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடாத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.