யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. லூஸன் சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (18.10.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை (19.10.2024) யாழ்ப்பாணத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூர்யா அவர்கள் விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி திரு. சம்லி பலுசேன அவர்களும் உடனிருந்தார்கள்.