பன்றிகள் வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வது இன்று (18) முதல் தடை செய்யப்பட்டுள்ளது என கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பன்றிகளின் இறைச்சியை பொதுமக்கள் உண்ண அனுமதியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட மேலும் சில மாகாணங்களிலும் பன்றிகளிடையே வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.