மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசியதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களையும் நேற்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன் போது சடலத்தை தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த போதும் நேற்றைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் மடூல்சீமை பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போது சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை இருப்பினும் இன்றைய தினம் பொலிஸார் இராணுவத்தினர் விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தினரின் உதவியுடன் இன்று தேடுதல் மேற்கொண்ட போது சடலம் சுமார் 400 அடிக்கு கிழ் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக மடூல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.