சீரற்ற காலநிலையால் யாழில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முக்கியமான உட்கட்டமைப்புகள் 2 சேதமடைந்துள்ளன. அவற்றில் ஒன்றின் மேல் மரம் சரிந்து விழுந்ததில் பகுதியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கனை, நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலே இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.