பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விருப்பு எண்களை ஆய்வு செய்த பின், குறித்த ஆவணங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி, இன்றும் (15) நாளையும் விருப்பு எண்களை வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.