நேற்று இரவு 11.00 மணி அளவில் யாழ்ப்பாணம் இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், வானின் [மகேந்திரா] கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக உடுவில் ஏ.பி.சி வீதியை சேர்ந்த ஒருவரால் இந்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.