ஜனாதிபதி தேர்தலின் போது தமது தேர்தல் செலவினம் தொடர்பான கணக்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறிய பொது வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது தேர்தல் செலவு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் காலகெடு நேற்றைய தினம் நிறைவடைந்தது.
இந்நிலையில் இறுதி நேரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட 35 வேட்பாளர்கள் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.