சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.