ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளார்.
எவ்வாறாயினும், புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், பரீட்சைக்கு முன்னர் 03 கேள்விகள் மாத்திரமே வெளிவந்திருந்தன என்பது விசாரணைக் குழுக்களின் இறுதித் தீர்மானமாகும்.