இஸ்ரேலின் வடபகுதியில் உள்ள இராணுவதளமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா இராணுவத் தாக்குதலில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பினாமியாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவ தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் காயமடைந்த படையினரில் ஏழு பேரின் நிலை ஆபத்தானதாக காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலிற்கு ஹெஸ்புல்லா அமைப்பு உரிமை கோரியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கொலானி படையணியையே இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
தென் லெபனானிலும் பெய்ரூட்டிலும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதில் தாக்குதல் இதுவென ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
பல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்கியதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.