நேற்று மாலை ஊடகவியலாளர் ஒருவர் தனது பணிகளை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதியால் வந்த இருவர் அந்த ஊடகவியலாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தினர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடமை புரியும் ஊழியர், நேற்று மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது கஸ்தூரியார் வீதியில் உள்ள தனியார் கூல்பார் ஒன்றுக்கு அருகாமையில் வைத்து, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தலைக்கவசத்தினால் குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.