பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், இன்று (11) அனைத்து மாவட்ட செயலகங்களிலும் விசேட போக்குவரத்துத் திட்டமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.