யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூதாட்டி உறவினர்கள் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் தனது வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று முற்பகல் அவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி திடீர்மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.மேலும், தடயவியல் பொலிஸாரும் தடயங்களைப் பெற்றுக் கொண்டனர்.