இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்றையதினம் (08-10-2024) வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 19 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 40,109 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் 42.3 சதவீதமும், வட மாகாணத்தில் 12 சதவீதமும், மத்திய மாகாணத்தில் 10.3 சதவீதமுமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 10,027 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டம் 4,698 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.