எல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவன் நேற்று (08) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வெய்ஹேன மத்தக பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் கடந்த 7 ஆம் திகதி எல்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.