இளைஞன் ஒருவர் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது, குறித்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் முகாமையாளர் காப்பாற்றிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், குறித்த இடத்திற்கு முகாமையாளர் சென்று பார்த்த போது நீர்த்தேக்கத்தில் இளைஞன் ஒருவர் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்டு அவரை காப்பாற்றியதாக விடுதியின் முகாமையாளர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட இளைஞன் 18-20 வயதுடையவர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.