யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்ற வேளை கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.