அநுராதபுரம், யசசிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவர் பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபரின் சகோதரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் இணைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரியை சந்திப்பதற்காக பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, தனது சகோதரியின் வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தின் கிளைகளை வெட்ட முயன்ற போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.