இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்துக் பறித்துக் கொண்டிருந்த பெண்கள் 5 பேரும் ஆண் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர். இரண்டு பெண்களும் ஒரு ஆணும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.