2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04) காலை முதல் ஆரம்பமாகிறது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி இன்று முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் முதல் நாளான இன்று முதல் இறுதி நாள் வரை எவ்விதமான ஊர்வலங்களோ, பேரணிகளோ மற்றும் குழுக்களாக ஒன்றுகூடலோ முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அரசாங்க அச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்குப் பிறகு, வேட்புமனுத் தாக்கல் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மணி நேரம் அனுமதிக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும், புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடும்.