கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சோலை பல்லவராயன் கட்டு கிராமத்தில் அமைந்துள்ள மகேஸ்வரன் சத்தியா என்பவரின் வாழ்வாதாரமாக வளர்க்கப்பட்டு வந்த 11 ஆடுகளும் ஒரு குட்டியும்நேற்று மாலை உயிரிழந்துள்ளன
குறித்த ஆடுகள் நேற்றைய தினம் மேச்சலுக்கு சென்ற இடத்தில் சத்திய ராச் என்பவரின் காணிக்குள் சென்றுள்ளது.
இந்நிலையில் தண்ணீருடன் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரம் கலக்கப்பட்டு நீர் ஆடுகளுக்கு பருகை வைக்கப்பட்டமையால் 11 ஆடுகளும் சத்தியராஜ் என்பவரின் காணியில் உயிரிழந்திருந்த நிலையில் அது தொடர்பில் பூனகரி போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.