இலங்கை நாடாளுமன்றம் மற்றும் பாகிஸ்தான் நாடாளுமன்ற சேவைகள் நிறுவகத்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்த்தப்பதற்கும் சட்டமாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சேவைகள் நிறுவகத்தின் சார்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாஹீமுல் அஸீஸூம் இலங்கை நாடாளுமன்றம் சார்பில் நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீரவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற பணியாளர்களுக்குப் பயிற்சி வாய்ப்புக்களை வழங்கும்போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும் எனத் தாம் நம்புவதாக இலங்கை நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர இதன்போது தெரிவித்துள்ளார்.