வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இருந்து கஞ்சாவுடன் பயணித்த இருவரை நேற்று(25.09.2024) புதன்கிழமை இயக்கச்சி ஆனையிறவில் வைத்து இராணுவத்தின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்
உடுத்துறை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 4.500Kg கஞ்சாவுடன் கொடுக்குளாய் சுனாமி வெளியேற்ற பாதையூடாக மோட்டார் சைக்கிளில் இரகசியமான முறையில் பயணித்த இருவரையே பளை பொலிசார் ஆனையிறவில் வைத்து கைது செய்தனர்
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 18 மற்றும் 25 வயதுடைய கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் கஞ்சாவுடன் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பளை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.