இந்திய அணிக்கு எதிராக நாளை (27) ஆரம்பமாகவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர விரர் ஷகீப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
சென்னையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் காயமடைந்தார். இதனால் அவர் அப்போட்டியில் அதிகம் பந்துவீசவும் வரவில்லை.
இதனையடுத்து ஷகிப் அல் ஹசன் தனது காயத்திற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது காயத்தை மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், அவர் முழுமையான உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே கான்பூரில் நடைபெறும் டெஸ்டில் விளையாட முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.