சுது கங்கை மாத்தளை கனங்கமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்கள் இருவரும் கனங்கமுவ பிரதேசத்தில் நீராடச் சென்று ஆற்றை நீந்திக் கடக்க முற்பட்ட போது தோட்டகமுவ கனகமுவ பிரதேசத்தை சேர்ந்த விஷால் திபிர யசோதர பண்டார என்பவரே நீரிலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய நபரின் சடலத்தை மீட்க பிரதேசவாசிகள் கடுமையாக முயற்சித்ததையடுத்து இன்று (25) ஆற்றின் ஓரத்தில் குறித்த சடலம் கிடப்பதை பிரதேசவாசிகள் கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.