லெபனான் மீது பயங்கரமான வகையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 500 லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை பாதுகாக்கும் வகையில் கேடயமாக மாறாதீர்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு லெபனான் மக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
லெபனான் மக்களுக்கான நேதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை. அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. உங்கள் வீடுகளில் ரொக்கெட்டுகளை பதுக்கி வைக்கிறது. அவைகள் எங்கள் நாட்டின் மக்களை குறிவைக்கின்றன. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு எதிராக எங்கள் மக்களை பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் வெளியே எடுக்க வேண்டும்” என்றார்.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இருந்து (லெபனான் எல்லை) வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக அமர்த்துவது எங்களுடைய நோக்கம் என போர் நோக்கத்தை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. மேலும், போரின் மையப்பகுதிய வடக்கு நோக்கி நகர்கிறது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
சில தினங்களுக்கு முன் போர் கட்டம் மாற்றப்படுகிறது என லெபனான் எச்சரித்திருந்தது. லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என இஸ்ரேல் பதில் அளித்திருந்தது.
இந் நிலையில்தான் லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்