நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் பக்தர்களின் தீவிர முயற்சியில் இடம் பெற்றது.
கடந்த 11/09/2024 அன்ரது ஆரம்பமான திருவிழாவின் பத்தாம் திருவிழாவான இன்று காலை 9:00 மணியளவில் நாகர்கோவில் கடற்கரையில் சமுத்திர தீர்த்தம் இடம் பெற்றுள்ளது.
வழமையாக அதிகாலையில் 4:00 மணியளவில் ஆலயத்தில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று 5:00 மணியளவில் சமுத்திரத்யில் சுவாமி தீத்தமாடுதல் வழமையாகும்.
நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றுள்ள நிலையில் இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை 6:00 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததனால் மருதங்கேணி போலீசாரால் நேற்று இரவு இடம் பெற்ற திருவிழாவை இடை நிறுத்தியுள்ளதுடன் இன்று காலை 6:00 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்ப்பட்ட பின்னர் சமுத்திர தீத்தமாடுதல் நடாத்தப்படுவதற்க்கு உபயகாரர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 6:00 மணியிலிருந்து நண்பகல் 12:00. மணிவரை ஊரடகக்கு உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆலய சமுத்திர தீத்த உற்சவ உபயகாரர்களால் நாகர்கோவில் கடலில் சமுத்திர தீத்தமாடுவதற்க்கு மருதங்கேணி பொலிசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டியும், உபயகார்களில் சிலர் தீத்த உற்சவம் இடம் பெற்றால் முரண்பாடு ஏற்படும் என போலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து சமுத்திர தீத்தம் ஆடுவதற்க்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தில் கூடியிருந்த உபயகார்கள், பக்தர்கள் பொலீஸாருடன் முரண்பட்டு சுவாமி சமுத்திர தீத்தம் ஆடும்வரை ஆலய சூழலை விட்டு அகலமாட்டோம் ஏன் விடாப்பிடியாக நின்ற நிலையில் மருத்தங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் காலை 8:30 மணியளவில் அனுமதி வழங்கப்பட்டு 9:00 மணியளவில் நாகதம்பிரான் நாகர்கோவில் சமுத்திரத்திரத்தில் தீத்தமாடினார்.
இதில் நாகர்கோவில் கிராம மக்கள், உட்பட வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பக்தர்களும் கலந்துகொண்டனர்.