• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

selvan by selvan
June 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
Share on FacebookShare on Twitter

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் இந்த விசேட கூட்டம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறண்ட காலநிலை காரணமாக நாட்டின் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய நேரடிப் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் தடையின்றிச் சேமித்து வைத்தல் மற்றும் பொதுமக்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைப் பாதுகாப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது குறித்துச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தங்களின் சாத்தியமான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் உடனடியாக வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு இதன்போது உத்தரவிட்டார்.

இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் மற்றுமொரு விசேட கூட்டத்தை எதிர்வரும் சில தினங்களுக்குள் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய தினம், எல் நினோ காலநிலை சவாலை எதிர்கொள்வதற்கான துல்லியமான செயல்முறைத் திட்டங்களைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கு அமைச்சர்களால் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்களான லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் பின்வருமாறு சுட்டிக்காட்டினர்.

“கடந்த காலங்களில் எற்பட்ட ‘டித்வா’ சூறாவளிப் பேரழிவு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட சவால்களுக்கு அரசு வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளது. அதேபோன்றே, வெளிப்புற சவாலாக உருவெடுத்துள்ள இந்த உலகளாவிய காலநிலை மாற்ற நிலைமையையும் தங்குதடையின்றிச் சிறந்த முறையில் கையாள்வதற்கான முறையான திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்திடம் காணப்படுகின்றன.” – என்றனர்.

Related Posts

பயங்கரவாதத் தடைச் சட்டம்விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம்விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

by selvan
June 9, 2026
0

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள 'தேசிய சாரணர் பொசன் வலயம்' தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி...

குறைபாடுகளை மாற்றுத் தரப்பிடம் கேட்டுத் தீர்ப்பதே சிறந்த அரசாங்கம்!

குறைபாடுகளை மாற்றுத் தரப்பிடம் கேட்டுத் தீர்ப்பதே சிறந்த அரசாங்கம்!

by selvan
June 9, 2026
0

குறைபாடுகள் இருந்தால் மாற்றுத் தரப்பினரிடம் கேட்டறிந்து, அதற்குரிய சரியான தீர்வுகளைக் காண்பதே ஒரு சிறந்த அரசின் உண்மையான பண்பாகும்" என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி