• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; 8 பேர் கைது.!

Mathavi by Mathavi
June 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; 8 பேர் கைது.!
Share on FacebookShare on Twitter

புத்தளத்தில் முந்திரி தோட்டம் ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாயு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிக்கி 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 8 பேரை வணாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வணாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு பகுதியில் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய அத்துக்கோரளகே பிரதீப் சுசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்துள்ள ஆரம்பகட்ட விவரங்களின்படி, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான கரைத்தீவு பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவுடைய முந்திரி தோட்டம், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முந்திரி அறுவடை செய்வதற்காகக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த முந்திரி தோட்டத்தின் விளைச்சலைப் பாதுகாப்பதற்காகக் குத்தகையாளரால் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த முந்திரி தோட்டத்துக்குள் இரகசியமாக நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் வாயு துப்பாக்கி மூலம் சுட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உடலின் முக்கிய பாகங்களில் கடுமையான காயங்களுக்குள்ளான பிரதீப் சுசந்த, அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியவர் உட்பட இதுவரை 8 சந்தேகநபர்களை வணாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைப் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வணாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

by selvan
June 9, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர...

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

by selvan
June 9, 2026
0

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள 'தேசிய சாரணர் பொசன் வலயம்' தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி