• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home அம்பாறை செய்திகள்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு மீண்டும் விளக்கமறியல்.!

Mathavi by Mathavi
June 9, 2026
in அம்பாறை செய்திகள், இலங்கை செய்திகள்.
0
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு மீண்டும் விளக்கமறியல்.!
Share on FacebookShare on Twitter

ரூபாய் பத்தாயிரம் தருவதாகக் கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகரை மீண்டும் 10 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை(8) மீண்டும் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வர்த்தகருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரை 10 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை)செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது.

இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை செயற்பாட்டிற்காக ரூபாய் பத்தாயிரம் தருவதாக பேரம் பேசியுள்ளார். பின்னர் சிறுவர்களில் ஒருவரை அச்செயற்பாட்டியில் ஈடுபடுத்தியுள்ளார். இதன்போது மற்றுமொரு சிறுவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை வர்த்தகரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் ஏற்கனவே பேரம் பேசிய ரூபாய் பத்தாயிரம் கிடைக்கப்பெறாமையினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை பதிந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் அடாத்தாக எடுத்துச் சென்றுள்ளனர். அதுமாத்திரமின்றி அச்சிறுவர்கள் குறித்த செயற்பாட்டிற்கு பேரம் பேசிய பணத்தை தருமாறு கோரி மிரட்டி அச்சுறுத்தியதுடன் தரவேண்டிய தொகை (பத்தாயிரம்) கிடைக்கப்பெறாத பட்சத்தில் சமூக ஊடகங்களில் பிரசுரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து சுதாகரித்த குறித்த 56 வயது திருமணமான வர்த்தகர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கடந்த மே மாதம் 06 ஆம் திகதி சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டில் தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் மேசையில் இருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியினை திருடிச் சென்றிருப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

வர்த்தகரின் குறித்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியில் வைத்து 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களையும் கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் விடயங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கடந்த மே 21 ஆம் திகதி குறித்த வழக்கானது கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த காணொளியை இரு சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த நிலையில் வழக்கின் சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிவான் கைதான இரு சிறுவர்களில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதான சந்தேக நபரான வர்த்தகரை கைது செய்யுமாறும் கட்டளை பிறப்பித்ததுடன் குறித்த வழக்கினை ஒத்திவைத்திருந்தார்.

இதன்போது பிரதான சந்தேக நபரான வர்த்தகர் தலைமறைவாகி இருந்ததுடன் குறித்த வழக்கும் மே மாதம் திங்கட்கிழமை (25) விசாரணைக்காக மறுதவணை இடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (25) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்திருந்த போது 4 நாட்கள் தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளுடன் மன்றில் சரணடைந்திருந்தார்.

இதன்போது சந்தேக நபரான வர்த்தகர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதியப்பட்டு பின்னர் மீண்டும் மன்றிற்கு அழைத்து வரப்பட்டு மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வர்த்தகருக்கு எதிர்வரும் யூன் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இவ்விடயம் குறித்து கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

by selvan
June 9, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர...

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

by selvan
June 9, 2026
0

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள 'தேசிய சாரணர் பொசன் வலயம்' தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி