• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஜூலை மாதத்துக்குள் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 198 மில்லியன் டொலராக குறையும்.!

Mathavi by Mathavi
June 4, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஜூலை மாதத்துக்குள் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 198 மில்லியன் டொலராக குறையும்.!
Share on FacebookShare on Twitter

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஸ்திரமாக இருக்கும் பட்சத்தில் அல்லது தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் பட்சத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் வரும் ஜூலை மாதத்துக்குள் கணிசமான அளவு குறையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகச் சந்தையில் நிலவிய அதிக விலை மற்றும் மின் உற்பத்திக்காக மேலதிக எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தமை காரணமாக, அண்மைக்காலமாக எரிபொருளுக்கான டொலர் வெளிப்பாய்ச்சல் நாட்டில் கடுமையாக அதிகரித்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வழமையாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது எரிபொருள் இறக்குமதிக்காக மாதத்துக்கு சராசரியாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையே செலவிட்டு வந்தது. எனினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தச் செலவினம் 522 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிரடியாக உயர்ந்தது. இதற்கான கொடுப்பனவுகள் கடந்த மே மாதத்திலேயே செலுத்தப்பட்டன. உண்மையில், எரிபொருள் கொள்வனவுக்காக நாட்டிலிருந்து அதிகளவிலான டொலர்கள் வெளியேறிய மாதமாக கடந்த மாதம் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 11 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அவை அனைத்துமே சர்வதேச சந்தையில் விலை அதிகமாகக் காணப்பட்ட காலகட்டத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டன. அத்துடன், மின் உற்பத்திக்காக மாத்திரம் பிரத்தியேகமாக ஒரு மேலதிக டீசல் கப்பலை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதுவும் அதிக விலைக்கே வாங்கப்பட்டது. டொலர் செலவினம் இந்தளவு அதிகரிக்க இதுவே பிரதான காரணமாக அமைந்தது.

இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, 522 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினம், இந்த ஜூன் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. எமது தற்போதைய கணிப்புகளின்படி, வரும் ஜூலை மாதமாகும்போது இதனை மேலும் 198 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கச்சா எண்ணெய் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளமையே இந்தச் செலவுக் குறைப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான அனைத்து கச்சா எண்ணெய்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் உறுதிப்படுத்தினார்.

உலகச் சந்தை நிலவரங்கள் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தற்போதைய சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, டீசல் விலையானது படிப்படியாகக் குறைந்து வருகின்றது. உலக சந்தை விலை இதே மட்டத்தில் நீடித்தால் அல்லது மேலும் குறைந்தால், எவ்வித பெரிய சிக்கல்களுமின்றி இந்தச் செலவினங்களை எம்மால் மேலாண்மை செய்ய முடியும். இதுவே எமது திட்டமாகும்.

இருந்தபோதிலும், ஜூலை மாதத்துக்குப் பின்னரான நிலைமையானது சர்வதேச சந்தையின் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிலேயே தங்கியுள்ளது. தற்போதைக்கு ஜூலை மாதம் வரையிலான தெளிவான திட்ட வரைவு எங்களிடம் உள்ளது. அதற்குப் பிறகான சூழலை உலக சந்தை விலைகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

சர்வதேச சந்தையில் மீண்டும் விலை அதிகரிப்பொன்று ஏற்பட்டாலோ அல்லது உலகளாவிய மோதல்கள் தீவிரமடைந்தாலோ, அது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்க நேரிடும்.” – என்றார்.

Related Posts

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

by Mathavi
June 7, 2026
0

மலையகத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் ஊடாக உயிர் ஆபத்துகளையும், பொருள் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும்,...

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர்...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 7, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு...

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு இப்போதிலிருந்தே எடுக்க...

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

by Mathavi
June 7, 2026
0

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்குப் பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாய்...

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

by Mathavi
June 7, 2026
0

தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள்...

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி