மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக உங்களை துரத்தி வந்த கஷ்டம் ஒன்று உங்களை விட்டு விலகிவிடும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பிரயாணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்களால் உடல் சோர்வு ஏற்படலாம். பயணத்தின் போது உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக பின்னடைவு இருக்காது. எதிரிகளால் பிரச்சினை வரும் ஜாக்கிரதை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புது வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்காக வங்கி கடன் முயற்சி செய்யலாம். ஆனால் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள். நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று இலாபம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். சிந்தனை எல்லாம் இலாபம் நஷ்ட கணக்கோடு இருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். நாலு பேர் மத்தியில் உங்களுடைய மதிப்பு மரியாதையும் உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சொந்த காலில் வாழ்கின்றோம் என்ற மனநிறைவும் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. சாதனையாளர்களாக இந்த நாளை கடந்த செல்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தொல்லை தொந்தரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் இருப்பவர்களே உங்களுக்கு பிரச்சினை கொடுக்கலாம். எதுவாக இருந்தாலும் பிரச்சினையிலிருந்து விடுபடும் வழியை தேடுங்கள். பேசிப் பேசி பிரச்சினைகளை பெருசாக்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நடக்காதது போல ஒரு உணர்வு இருக்கும். மனக்கவலை உண்டாகும். முயற்சிகளில் இழுபறி இருக்கும். இதனால் சோர்வடைய கூடாது. விடாமுயற்சி கட்டாயமாக உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். எதிலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நண்பர்களோடு சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். புது எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. புது முயற்சிகள் எடுக்கும் போதும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் வீட்டில் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். வீண்விரையை செலவுகள் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் சரியாகும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். உற்சாகம் பிறக்கும் நாள் இன்று. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடும் நிதானத்தோடும் இருப்பீர்கள். பெரிய பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அதை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். நல்ல அனுபவம் கிடைக்கும். நல்ல பக்குவம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய பேச்சுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்.



