• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முதல்வரின் செயற்பாடுகளை ஆளுநர் தடுத்தால் மாநகரசபை எதற்கு?

Mathavi by Mathavi
April 29, 2026
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
முதல்வரின் செயற்பாடுகளை ஆளுநர் தடுத்தால் மாநகரசபை எதற்கு?
Share on FacebookShare on Twitter

வட்டாரங்களின் தேவை அறிந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை ஆளுநர் தடுக்க முடியும் என்றால் இந்த மாநகரசபை இருக்க வேண்டிய தேவை என்ன என்று வவுனியா மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகார போக்கின் வெளிப்பாடே வவுனியா மாநகரசபை மீதான நடவடிக்கைகள் என அவதானிக்க முடிகின்றது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதல்வரின் நடவடிக்கைகளை ஆளுநரால் கட்டுப்படுத்த முடியும் என்றால் எதற்காக இந்த மாநகரசபைகள் இயங்கவேண்டும் என்று எமக்கு தெரியவில்லை.

மழைக்காலங்களில் திருநாவற்குளம் பகுதியில் வெள்ளநீர் தேங்கி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது தொடர்பாக ஆளுநருக்கு தெரியுமா? அது ஊர் அறிந்த விடயம். அங்கு வாழ்கின்ற மக்களுக்கே அதன் தார்ப்பரியம் புரியும். எவர் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்று அந்த கிராம மக்களுக்கு தெரியும்.

சபையை சரியாக வழிநடத்த விடாமல் கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அரசுசார்பான உறுப்பினர்கள் அதற்கு துணையாக நிற்கும் அடிவருடிகள் இருக்கும் வரை யாராலும் இந்த சபையை நடாத்த முடியாது.

எனவே முதல்வர் தன்னிச்சையாக ஆளும் தரப்பு உறுப்பினர்களின் அனுமதியுடன் சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார். அதுவே உண்மை.

அத்துடன் பொலிஸ் நிலையம் முன்பாக இருக்கும் அங்காடி விற்பனை பகுதியில் ஏற்கனவே அங்காடி கடைகள் தான் இயங்கி வந்தது. அப்போதெல்லாம் இவர்களது கண்களுக்கு அது தெரியவில்லையா? வீதியில் இருந்தவர்களை கொண்டு வந்து தற்காலிகமாக நாம் அங்கு அமர்த்தியதும் தான் இவர்களுக்கு பிரச்சினையாக உள்ளத., அப்படியானால் அவர்களை மீண்டும் வீதியிலா விடுவது.

வவுனியா வரலாற்றில் இதுவரை யாரும் காணாத விடயம் ஒரு உள்ளூராட்சி சபையையே நடாத்த விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதன் பின்னணியில் சட்டவிரோதமாக கள்ளமாடு வியாபரம் செய்பவர்களும், NPP அரசின் சர்வாதிகார போக்குமே அதனை செய்தது.

இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தமது கைகளுக்குள் இருக்க வேண்டும் என்ற நோக்கமே வவுனியா மாநகரசபையை தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பதற்கான காரணம். பதவி மோகமும் பணத்தின் மோகமும் உடைய கயவர்களின் இச்சைகளை அறிந்த நரிக்கூட்டம் அவர்களை பயன்படுத்தி சபையை முடக்கினர் என்பதுவே உண்மை. என்று தெரிவித்தார்.

Related Posts

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 21, 2026
0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை (20) களு...

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

by Mathavi
May 21, 2026
0

போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின்...

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

by Mathavi
May 21, 2026
0

மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின்...

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 21, 2026
0

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட...

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (21)...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கால்வாயில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 21, 2026
0

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாகப் உஹன...

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

by Mathavi
May 21, 2026
0

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி