உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
55 பார்வைகள்

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.
ஜனாதிபதி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, நேற்று இரவு 10.04 மணியளவில் புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-196 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.


இச்சர்வதேச மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் எதிர்கால தாக்கம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி முக்கிய உரையாற்றினார். மேலும், இப்பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினரை வரவேற்கும் பொருட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தத் திட்டம்.!

நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

44 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 48…

48 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குக.!

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்…

58 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மழை அதிகரிப்பு.!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டிலும் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற…

69 0 0