மலையகத்தில் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான அமரர் கருப்பையா வேலாயுதத்தின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (13) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு பதுளை மாவட்டத்தில் நினைவஞ்சலிக் கூட்டமும், பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொது இடங்களில் மரம் நடும் நிகழ்வும் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்குள் 23 ஆயிரத்து 932 மரங்களை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சில பெருந்தோட்டப் பாடசாலைகளில் சதுரங்கப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி என்பனவும் இடம்பெறவுள்ளன. இந்தப் போட்டிகள் இந்த மாத இறுதியிலும், அடுத்த மாதம் ஆரம்பத்திலும் இடம்பெறவுள்ளன.
தொழிற்சங்கத் தலைவர், ஊவா மாகாண சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் என முக்கிய பதவிகளை வகித்த கருப்பையா வேலாயுதம், அதன்மூலம் மலையக மக்களுக்குப் பல சேவைகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப் பகுதியிலேயே பசுமை பூமி காணி உரிமைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.










