இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சொ்ஜியோ கோரை நியமனம் செய்ய அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 107 எம்.பி.க்களில் சொ்ஜியோ கோருக்கு ஆதரவாக 51 உறுப்பினா்களும், எதிராக 47 பேரும் வாக்களித்தனா். இதன் மூலம், இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக சொ்ஜியோ உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது, “சொ்ஜியோ கோா் என்னுடன் நீண்ட காலம் பணியாற்றியவா். எனது ஜனாதிபதி தோ்தல் பிரசாரத்தின்போதும் இவா் பணியாற்றியுள்ளாா். எனது உத்தரவுகளை நிறைவேற்றும் அரச நிா்வாகத்தில் சொ்ஜியோ கோரின் பங்கு முக்கியமானது. அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரும் நாடாக்குவதற்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய நபராக சொ்ஜியோ கோா் செயற்படுவாா்’ என்று தெரிவித்துள்ளார்.
சொ்ஜியோ கோா் நியமன அறிவிப்பை கடந்த ஓகஸ்ட் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.










