• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஈ.பி.டி.பி நிமலராஜனை கொ*ல்லவில்லையாம்; ஸ்ரீகாந் வியாக்கியானம்.!

Mathavi by Mathavi
September 10, 2025
in இலங்கை செய்திகள்.
0
ஈ.பி.டி.பி நிமலராஜனை கொ*ல்லவில்லையாம்; ஸ்ரீகாந் வியாக்கியானம்.!
Share on FacebookShare on Twitter

ஊடகவியலாளர் நிமலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்ற விடயங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு இருந்தது என தெரிவித்த ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந், பொன் சிவபாலனில் கொலை செய்வதற்கான கிளைமோர் பொருத்தப்பட்டது. அதற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக செயற்பட்டார்கள். இது தொடர்பான விசாரணைகளை எவ்வாறு அமுக்கினார்கள் போன்ற ஆதாரங்கள் எம்மிடமும் இருக்கின்றன.

அவை விசாரிக்கப்படுமாயின் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை தொடர்பாக பார்ப்போமேயானால், அவர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

2000 ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியாகிய சுடரொளி பத்திரிகையில் வெளியாகிய செய்தியில் நிமலராஜனுக்கு எந்த தரப்பினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.

அன்றைய காலச்சூழலில் ஊடகவியலாளர் நிமலராஜனுடன் நெருக்கமாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரினால் விண்ணன் என்ற புனை பெயரில் எழுதப்பட்ட அந்த விளக்கமான கட்டுரையில் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் நிமலராஜனுக்கும் முரண்பபாடு இருப்பதாகவோ, நிமலராஜனுக்கு ஈ.பி.டிபி. இனால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்றோ ஒரு வசனம்கூட சொல்லப்படவில்லை. இதுதான் உண்மை. இவ்வாறுதான் அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்டவையாகவே இருக்கின்றன.

ஆனால் ஒரு விடயம். கடந்த காலங்களில் நிமலராஜன் மட்டும் கொலை செய்யப்படவில்லை. இந்த மண்ணிலே பல துறைசார் ஆளுமைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவையும் விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறான கொலைகளுக்கு உடந்தையாக செயற்பட்ட பல ஆசாமிகள் இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சில ஆசாமிகள்தான், எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தூசுதட்டி எம்மை சிக்க வைக்க ஆர்வமாக செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஈ.பி.டி.பி ஐ நோக்கி அவர்கள் சுட்டுவிரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.

உதாரணமாக யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் சறோஜினி யோகேஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பொன் சிவபாலன் போன்ற பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பொன் சிவபாலனில் கொலை செய்வதற்கான கிளைமோர் பொருத்தப்பட்டது. அதற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக செயற்பட்டார்கள். இது தொடர்பான விசாரணைகளை எவ்வாறு அமுக்கினார்கள் போன்ற ஆதாரங்கள் எம்மிடமும் இருக்கின்றன. அவை விசாரிக்கப்படுமாயின் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம்.

எவ்வாறாயினும், எமக்கு எதிரான விடயங்கள் தொடர்பாக மகிழ்ச்சி அடைகின்றோம். எமக்கு எதிரான தரப்புக்கள் எதிர்பார்ப்பது போன்று, தற்போதைய அயசியல் சூழலில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படைத் தன்மையோடு நீதியான முறையில் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுகின்ற சூழல் உருவாக்கப்படுமாயின் எமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்பது நிரூபிக்கப்படும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது.

எனவே அனைவருக்கும் ஒரு விடயத்தினை தெளிவாக சொல்கின்றோம். எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் பகிரங்கமான சவாலாக சொல்கின்றேன் எமக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கமாயின் உரிய இடங்களில் அவற்றை முறைப்பாடுகளாக பதிவு செய்யுங்கள். அவை தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். சமூக ஊடகங்கள் பொருத்தமான இடங்கள் அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிகையில்,

மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அவசர கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் கடந்த காலங்களில் இந்த நாட்டிலே இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரும் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவை பேசுபொருளாக இருப்பதனை தவிர்க்கும் நோக்கிலும், கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சொல்லி வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மீண்டும் பேசுபொருளாக்கி எம்மை அரசியல் களத்தில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்று உள்ளூர விரும்புகின்ற பிரகிருதிகளும், இதன்மூலம் புலி ஆதரவு தரப்பினரை மகிழ்விக்க முடியும் என்று கணக்கு போடுகின்றவர்களும், தங்களுடைய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி எமக்கு எதிரான செயற்பாடுகளை, பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அதற்காக, கடந்த காலங்களில் எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக இருந்து கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதையும் அவதானித்து வருகின்றோம்.

தன்னுடைய வாழ்நாளையே தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்காக அர்ப்பணித்து மானசீகமாக மக்களுக்காக உழைத்து வருகின்ற – தன்னை நோக்கி வருகின்ற சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் மிக்க தலைமைத்துவ ஆளுமையான தோழர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு செயற்படுகின்ற நாம் இவ்வாறான சமூக ஊடக பரபரப்புக்களை அலட்டக்கொள்ளவில்லை.

எமக்கு எதிரான குற்றசாட்டுக்கள் அனைத்தும் அந்தந்தக் காலப் பகுதியில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய்கள் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

by selvan
May 21, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழுவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன தலைமையில்...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

by selvan
May 21, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  வருடாந்த மகோற்சவ பெருவிழா  இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இன்றைய தினம் (21) காலை   உற்சவ மூர்த்திகளுக்கு ...

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

by selvan
May 21, 2026
0

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது விவகாரம் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்துக்கள், அந்த வழக்கோடு தொடர்புடைய 15 வயது சிறுமியை நோக்கமாகக் கொண்டவை அல்ல என...

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

by selvan
May 21, 2026
0

தமிழ் மக்களாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி