மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. புது முடிவுகளை எடுக்க வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சினைகள் தானாக விலக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த கடன் பிரச்சினை சரியாகும். வாராத கடன் வசூல் ஆகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சிலருக்கு இடமாற்றம் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூரப் பயணம் நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். கைவிட்டுப் போன நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களைத் தேடி மீண்டும் வரும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத மனக் குழப்பத்திலிருந்து வெளி வருவீர்கள். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்பதற்கு உண்டான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நீண்ட தூரப் பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயற்பட வேண்டிய நாள். வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம். புதிதாக ஏதாவது தொழில் தொடங்குவதாக இருந்தால் பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை விடக்கூடாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கையில் இருக்கும் பணம் வீண் விரையமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிலும் சம்பளம் வாங்கியிருந்தால் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி கொடுக்கும். நீண்ட நாள் துயரங்கள் நீங்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூறக்கூடிய நாளாக இருக்கும். பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகள் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சண்டை சச்சரவோடு இருந்து வந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வேலையிலும் வியாபாரத்தையும் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனமகிழ்ச்சியோடு இருப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்தித்து பேசி மகிழ்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். நேரம் போனதே இன்று தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு அதிகரிக்கும். காதல் வெளிப்படும். கணவன் மனைவிக்கு ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்கக் கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பக்தி நிறைந்த நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் மனதை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை ஒரு முடிவுக்கு வந்துவிடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நிதி நிலைமை சீராகும் கடன் சுமை குறையும்.







