ஹட்டன் தொலைத்தொடர்பு திணைக்களத்திற்கு உரித்தான கட்டிடம் பல வருடங்களாக பாழடைந்த நிலையில் உள்ளது.
குறித்த கட்டிடம் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் உள்ள சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் சாமிமலை பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ளது.
சுமார் இரண்டரை தசாப்தங்களாக (இருபத்தைந்து) வருடங்களுக்கு முன்பு பல இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் இதுவரை எவரும் குடியமர்த்தப்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த கட்டிடம் பாழடைந்த நிலையில் குளவிக் கூடுகள், வன ஜீவராசிகளின் வாழ்விடமாக காட்சியளிக்கிறது.
மேலும் இதில் பொருத்தப்பட்டிருந்த கதவு ஜன்னல் போன்றவை விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டிடம் சில வெளி நபர்களால் கலாச்சார சீரழிவுகள் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாள குடும்பங்கள் இருப்பிட வசதிகள் இல்லாத நிலையில் இந்த கட்டிடம் சம்பந்தமாக இதுவரை காலமும் கவனம் செலுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று பிரதேச மக்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் தொலைத்தொடர்பு நிறுவனம் உடன் கவனம் செலுத்தி அப் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.










