1944
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
1807
பிரித்தானியப் படையினர் சர் ஆரதர் வெல்லசுலி தலைமையில் கோபனாவன் நகருக்கு வெளியே கோகி என்ற இடத்தில் டென்மார்க்கு படைகளை வென்றனர்.
1831
மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
1842
நாஞ்சிங் உடன்படிக்கையை அடுத்து முதலாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது. பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
1869
உலகின் முதலாவது மலையேற்ற பற்சட்ட இருப்புப்பாதை வாசிங்டனில் அமைக்கப்பட்டது.
1882
தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலண்டனில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது.
1885
காட்லீப் டைம்லர் உலகின் முதலாவது உள் எரி பொறி விசையுந்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1898
குட்இயர் டயர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1907 –
கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1910
ஜப்பான் – கொரியா இணைப்பு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து கொரியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஆரம்பமானது.
1911
ஐரோப்பிய அமெரிக்கர்களுடன் கடைசியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இஷி என்ற கடைசி பழங்குடி அமெரிக்கர் வடகிழக்கு கலிபோர்னியாவின் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியே வந்தனர்.
1915
எஃப்-4 அமெரிக்காவின் விபத்துக்குள்ளான முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
1916
பிலிப்பைன்சுக்கு சுயாட்சி வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1930
சென் கில்டா தீவுகளின் கடைசி 36 குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கள்.
1941
இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நாட்சி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டது.
1943
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட டென்மார்க்கின் அரசை ஜேர்மனி கலைத்தது.
1944
இரண்டாம் உலகப் போர்: 60,000 சிலோவாக்கியப் படைகள் நாட்சி ஜெர்மனிக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1949
சோவியத் ஒன்றியம் தனது ஜோ 1 என அழைக்கப்பட்ட முதலாவது அணுக்கரு ஆயுதத்தை கசக்ஸ்தானில் சோதித்தது.
1950
கொரியப் போர்: பிரித்தானியப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.
1965
ஜெமினி V விண்கலம் புவிக்குத் திரும்பியது.
1966
எகிப்திய அரசுத்தலைவர் ஜமால் அப்துல் நாசிரக் கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக எகிப்திய சிந்தனையாளர் சய்யித் கூத்துப் தூக்கிலிடப்பட்டார்.
1966
பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
1982
செயற்கைத் தனிமம் மெய்ட்னீரியம் (அணு எண் 109) முதல் தடவையாக ஜேர்மனியில் தொகுக்கப்பட்டது.
1991
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் சோவியத் உயர்பீடம் தடை செய்தது.
1996
நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று மலையுடன் மோதியதில் 141 பேர் உயிரிழந்தனர்.
1997
அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2003
ஈராக்கில் நஜாப் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் சியா இஸ்லாம் தலைவர் அயொத்தொல்லா சாயது அல்-அக்கீம் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.
2005
அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $125 பில்லியன் சேதம் ஏற்பட்டது.
2012
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காணாமல் போயினர்.
















