அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மத்திய சந்தை வியாபாரிகளுக்கு சவாலாக தெருவோர வியாரச் செயற்பாடுகள் அமைகின்றதாக மத்திய சந்தை வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இத் தெருவோரங்களில் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தினை முன்னெடுப்பதனால் சனநெரிசலும் காணப்படுகின்றது. இதனால் சாரதிகளும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
மேலும் தம்பிலுவில் மத்தி சந்தை வளாகம் பரந்த நிலப்பரப்பை கொண்டது ஏன் அதனுள் கொண்டு வந்து வியாரத்தினை மேற்கொள்ளாது தெருக்களிலும், வீதி சந்திகளிலும் வைத்து வியாபாரத்தினை மேற்கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறித்த வியாபார நடவடிக்கையானது தம்பிலுவில் கலைமகள் பாடசாலை தொடக்கம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத் தெருவோர வியாபாரத்தினால் கால்நடைகளும் வீதிகளில் திரிகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதனை தடுத்து மத்திய சந்தையினுள் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ள உரிய அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.










