1856
இலங்கையில் ரயில்வே சட்டம் சட்டவாக்கப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
1812
பிரித்தானிய அமெரிக்கப் போர் : அமெரிக்கத் தளபதி வில்லியம் அல் டிட்ராயிட் கோட்டையை எவ்வித எதிர்ப்பும் இன்றி பிரித்தானியப் படைகளிடம் கையளித்தார்.
1819
இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குதிரைப்படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.
1841
அமெரிக்கத் தலைவர் ஜான் டைலர் அமெரிக்காவின் இரண்டாவது வங்கியை அமைப்பதற்கு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை விதித்தார். விக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் முன் வரலாறு காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
1858
அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புகேனன் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐரோப்பாவுடனான தந்திச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.
1863
டொமினிக்கன் குடியரசில் எசுப்பானியா மீண்டும் தனது குடியேற்றத்தை ஆரம்பித்ததை அடுத்து, அந்நாட்டின் இராணுவத் தலைவர் கிரிகோரியோ லுப்பெரோன் டொமினிக்கன் குடியரசின் கொடியை ஏற்றி டொமினிக்கன் மறுசீரமைப்புப் போரை ஆரம்பித்தார்.
1869
பரகுவை போர்: சிறுவர்களைக் கொண்ட பரகுவைப் படைப்பிரிவினரை பிரேசில் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
1891
ஆசியாவிலேயே உருக்கினாலான முதலாவது தேவாலயம், சென் செபஸ்தியான் பேராலயம், மணிலாவில் திறந்து வைக்கப்பட்டது.
1900
இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியா தனது 13 நாள் முற்றுகையை நிறுத்தியதை அடுத்து எலாண்ட்சு ஆற்று சமர் முடிவுக்கு வந்தது. இச்சமர் 2,000 முதல் 3,000 பூவர்கள் 500 ஆத்திரேலிய, ரொடீசிய, கனேடிய, பிரித்தானியக் கூட்டுப் படைகளை சுற்றி வளைத்ததை அடுத்து ஆரம்பமானது.
1906
சிலியில் 8.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.
1918
செக்கோசிலோவாக்கியப் படையினருக்கும் சோவியத் செஞ்சேனைக்கும் இடையில் பைக்கால் ஏரியில் போர் இடம்பெற்றது.
1920
உசுபெக்கிசுத்தான், புகாரா கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநாட்டில் ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.
1920
போலந்து – சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.
1923
அந்தாட்டிக்காவில் தாம் உரிமை கோரிய நிலத்துக்கு ஐக்கிய இராச்சியம் ரொஸ் சார்புநிலம் எனப் பெயரிட்டு அதன் நிர்வாகத்தை நியூசிலாந்து ஆளுநரிடம் கையளித்தது.
1927
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் இருந்து அவாய், ஒனலுலு வரையான வானூர்திகளின் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. போட்டியில் பங்குபற்றிய எட்டு வானூர்திகளில் ஆறு காணாமல் போயின.
1929
பாலத்தீனத்தில் பலத்தீனிய அரபுகளுக்கும் யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும் உயிரிழந்தனர்.
1930
பிடில்சுடிக்சு என்ற முதலாவது வண்ணக் கேலித் சித்திரத் திரைப்படம் வெளியிடப்பட்டது.
1930
முதலாவது பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள் ஒண்டாரியோ, ஆமில்டன் நகரில் வெல்லிங்டன் பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஒன்று பசிபிக்கில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் கலிபோர்னியாவில் டாலி நகரில் தரை தட்டியது. இதன் இரண்டு ஓட்டுநர்களும் காணாமல் போயினர்.
1946
கல்கத்தாவில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
1960
சைப்பிரசு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1962
பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
1964
வியட்நாம் போர்: தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டோங் வான் மின் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1972
மொரோக்கோவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1987
அமெரிக்காவின் டிட்ராயிட் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 154 பேர் உயிரிழந்தனர். செசிலியா சீசான் என்ற 4 வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
1991
இந்தியன் ஏர்லைன்ஸ் 257 போயிங் 737 வானூர்தி இம்பால் வானூர்தி நிலையத்தை அணுகும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து (69 பேரும்) உயிரிழந்தனர்.
2005
வெனிசுவேலாவில் மேற்குக் கரிபியன் வானூர்தி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து (160 பேரும்) உயிரிழந்தனர்.
2006
இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2012
தென்னாப்பிரிக்காவில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.
2013
பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 61 பேர் உயிரிழந்தனர், 59 பேர் காணாமல் போயினர்.
2015
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கூடிய சந்தை ஒன்றின் மீது படையினர் குண்டுகள் வீசியதில் 96 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2015
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் திரிகானா ஏர்லைன்சு வானூர்தி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து (54 பேரும்) உயிரிழந்தனர்.
















