மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் நடந்து முடியும். வீட்டில் இருக்கும் பெண்கள், ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடைய சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பல நன்மைகள் உங்களைத் தேடி வரும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கத் தொடங்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய மனதில் நிம்மதி பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். இறை வழிபாட்டை மனநிறைவோடு செய்து சந்தோஷம் அடைவீர்கள். வீட்டில் பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலை வியாபாரத்தில் கொஞ்சம் சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கிறது. பெருசாக பிரச்சினை இல்லை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தடங்கல்கள் வருவது போலத்தான் சூழ்நிலை அமையும். இருந்தாலும் தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி நீங்கள் வெற்றி பெறுவதற்கான வழியை அந்த இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பான். கஷ்டத்திற்கு பிறகு மகிழ்ச்சி வந்து சேர்ந்தடையும் நாள். வேலையும் வியாபாரமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எல்லா விஷயத்திலும் ஆர்வமாக செயற்படுவீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். மனத்தெளிவு இருக்கும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாள். சாந்தமான நாள். பெரிதாக எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பிரச்சினையும் இல்லாமல், இந்த நாள் நகர்ந்து செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட வெற்றியை அடைவீர்கள். இலாபம் கை நிறைய கிடைக்கும். மன மகிழ்ச்சி இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் கஷ்டப்படும். கையில் இருக்கும் பணம் வீண் விரைய செலவாக வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். புது முதலீடுகளை செய்ய வேண்டாம். வேலையில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புது முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையற்ற மனக் குழப்பங்கள் உங்களை சரியான நேரத்தில் வேலையை செய்ய விடாது. இதனால் சில பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குழப்பத்திலிருந்து வெளிவர வேண்டும். தெளிவான மனநிலையை பெற இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் உங்களுடைய பெயர் நிலை பெற்றிருக்க வேண்டும். இன்று அயராது உழைப்பீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியையும் கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கடன் சுமை குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று திறமைசாலியாக செயற்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் முக்கியம் என்று நன்றாக புரிந்து வைத்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்துவிட்டு நல்ல பெயரும் வாங்கி விடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை நீங்களே பொதுப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இரக்க குணம் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிதி நிலைமை சீர்படும். கடன்சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது மகிழ்ச்சியோடு இருக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளுடைய மனதை புரிந்து கொண்டு அவர்களுடைய ஆசையை கேட்காமலேயே பூர்த்தி செய்து கொடுக்கக்கூடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். சந்தோஷம் இரட்டிப்பாகும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.









